மீமிசலில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
மீமிசலில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி மீமிசல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விநாயகர் சிலை பிரஷ்திடை செய்யப்பட்டு பக்தர்கள் வணங்கி வந்தனர். தொடர்ந்து பூஜைகளும் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மீமிசல் பகுதிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. பின்னர் மீமிசலில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகள் மீமிசல் காளிகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் கல்யாணராமன் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தை விநாயகர் சிலைகள் சுற்றி வந்தன. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆர்.புதுப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தெட்சிணாமூர்த்தி (அறந்தாங்கி), காமராஜ் (கோட்டைப்பட்டினம்) மற்றும் ஏராளமான போலீசார் விநாயகர் சிலைகளுக்கு முன்பும், பின்பும் பாதுகாப்பாக சென்றனர்.
முன்னதாக மீமிசல் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார். இதில் அமைப்பு செயலாளர் நாகராஜ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ராமமூர்த்தி, கோடக்குடி முத்துகுமார், சாமி முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story