3 பேரை தாக்கிய வழக்கில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கைது
ஊத்துக்குளி அருகே 3 பேரை தாக்கிய வழக்கில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளரை போலீசார்கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 39). இவருடைய நண்பர் அசாம் மாநிலத்தை சேர்ந்த மந்தோஷ். முன்விரோதம் காரணமாக இவர்கள் 2 பேரையும் சிட்கோ வெள்ளைக்கரடு எஸ்.பி.புதுரை சேர்ந்தவரும், விசுவ இந்து பரிஷத் திருப்பூர் மாவட்ட செயலாளருமான வசந்த் (35) மற்றும் இவருடைய நண்பர்களான சூர்யா, ராபர்ட் கிஷோர் ஆகியோர்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊத்துக்குளி போலீசில் செல்வன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வசந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் சூர்யா மற்றும் ராபர்ட் கிஷோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதே போல் முன்விரோதம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி சிட்கோ பகுதியை சேர்ந்த கார்த்திக் ரவிதாஸ் (24) என்பவரை வசந்த் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திக் ரவிதாஸ், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக அவர் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாகவும் ஊத்துக்குளி போலீசார் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் 3 பேரை தாக்கிய இந்த இரண்டு வழக் குகளிலும் சம்பந்தப்பட்டு இருந்த வசந்த் என்பவரை ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் கைது செய்தார்.
பின்னர் அவினாசி கோர்ட்டில் வசந்த் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வசந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் எனவே சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story