வேலை வாங்கி தருவதாக பண மோசடி: போலி அலுவலகம் நடத்திய வாலிபர் கைது


வேலை வாங்கி தருவதாக பண மோசடி: போலி அலுவலகம் நடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2018 3:30 AM IST (Updated: 21 Sept 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

போலியாக அலுவலகம் நடத்தி வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 


ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய பல்கலைக் கழக மானிய குழுவின் தென் கிழக்கு மண்டலத்தின் இணை செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அனுப்பிஇருந்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தேசிய பல்கலைக்கழக மானிய குழு கிளை அலுவலகம் மதுரையில் இருப்பதாகவும், அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா என்று விசாரித்து தெரிவிக்கும்படி எங்களது அலுவலகத்திற்கு தீபா என்பவர் மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார். அது குறித்து நான் விசாரித்து மதுரையில் கிளை அலுவலகம் எதுவும் இல்லை என்று பதில் அனுப்பினேன். மேலும் தேசிய பல்கலைக்கழகத்தின் பெயரில் போலியாக மதுரையில் அலுவலகம் நடத்தி வருபவர் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டர். அதன் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் அந்த அலுவலகத்திற்கு சென்று விசாரித்த னர்.

அதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சத்தியசீலன்(வயது 30). இவர் பொன்மேனி மாடக் குளம் மெயின்ரோட்டில் பல்கலைக்கழக மானிய குழு கிளை அலுவலகம் என்று போலியாக அமைத்துள்ளார். இந்த அலுவலகம் மூலம் அவர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சத்தியசீலனை கைது செய்தனர். 

Next Story