பெரம்பலூரில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2018 2:00 AM GMT (Updated: 21 Sep 2018 2:00 AM GMT)

பெரம்பலூரில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் நமச்சிவாயம், மாவட்ட இணைச்செயலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில துணைத் தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினார்.

பொது சுகாதாரத்துறை சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுவதில் பாரபட்சம் காட்டும் சுகாதாரத்துறை அரசு இணைச்செயலாளரை கண்டித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Next Story