எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் இருந்து 16 கைதிகள் விடுதலை


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் இருந்து 16 கைதிகள் விடுதலை
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 2:10 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் இருந்து 16 ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

நெல்லை, 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் இருந்து 16 ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 649 பேர், விசாரணை கைதிகள் 503 பேர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 54 பேர், ஒரு தூக்குத்தண்டனை கைதி உள்பட மொத்தம் 1,212 கைதிகள் உள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, பாளையங்கோட்டை சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து நன்னடத்தையில் இருக்கின்ற 280 கைதிகள் விடுதலை ஆவதற்கு தகுதி பெற்றனர். அவர்களின் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்து 5 கட்டமாக 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

16 கைதிகள் விடுதலை

நேற்று 7–வது கட்டமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த 16 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்ட 16 கைதிகளுக்கும் அவர்களுடைய உடைமைகள், சிறையில் வேலை பார்த்ததற்கான சம்பளம் ஆகியவற்றை வழங்கி சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, பாளையங்கோட்டை சிறையில் இருந்து இதுவரை 42 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 238 பேரும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story