வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 8:01 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

நெல்லை, 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வரைவு வாக்காளர் பட்டியல் 

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், நாங்குநேரி, ராதாபுரம் என 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1–ந் தேதி வெளியிடப்பட்டது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 31–ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம் பணி நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வசதியாக அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சிறப்பு முகாம் 


வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) அடுத்த மாதம் 7, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 1–1–2018 அன்று 18 வயது நிரம்பியவர்கள் படிவம் 6–ஐ பெற்று பிறப்பு சான்று மற்றும் குடியிருப்பு ஆதாரத்துடன் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். புதிதாக திருமணமாகி வரப்பெற்றவர்கள் படிவம் 6–ல் முன்பு ஓட்டு இருந்த முகவரியினை எழுதி, அதனுடன் பழைய புகைப்பட அடையாள அட்டை நகலையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெயரை நீக்க வேண்டும் என்றால், படிவம் 7–ஐ பூர்த்தி செய்து, நீக்கப்பட்டவர்களின் இறப்பு சான்று நகர் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பெயர் நீக்க வேண்டும் என்றால், படிவம் 8–ஐ செய்து கொடுக்க வேண்டும்.

ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் படிவம் 8ஏ–ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story