மளிகை கடை உரிமையாளரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது


மளிகை கடை உரிமையாளரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட மளிகை கடை உரிமையாளரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம், 


குத்தாலம் அருகே நாகமங்கலம் அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் தம்பிசிவம் (வயது 35). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். திருமணஞ்சேரி ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராமசுந்தரம் மகன் ராஜா (20). சம்பவத்தன்று தம்பி சிவம் தனது குழந்தையுடன் மளிகை கடை வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தம்பி சிவத்தை மோதுவதுபோல மோட்டார் சைக்கிளில் ராஜா வேகமாக வந்ததாக தெரிகிறது. இதனை தம்பிசிவம் தட்டிக் கேட்டார். இதில் தம்பிசிவத்திற்கும், ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜா தான் வைத்திருந்த கத்தியால் தம்பிசிவத்தை வெட்டினார். இதில் காயம் அடைந்த தம்பிசிவம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். 

Next Story