மானாமதுரை அருகே அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தரைப்பாலம் இடிந்தது


மானாமதுரை அருகே அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தரைப்பாலம் இடிந்தது
x
தினத்தந்தி 22 Sept 2018 4:00 AM IST (Updated: 21 Sept 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே அதிகாரிகள் பொருட்படுத்தாமல் மெத்தன போக்கை கடைப்பிடித்ததால் பாலம் இடிந்து விழுந்தது.

மானாமதுரை,

மானாமதுரை ஜீவா நகர் அருகே ஆதனூர் கண்மாய் புறம்போக்கு பகுதியில் காட்டு நாயக்கன் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் 40–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்காக ஆதனூர் கால்வாயின் மேல் பகுதியில் தரைப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பராமரிக்கப்படாததால் அந்த பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.

ஆனால் பாலத்தை சீரமைக்காமல் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனம் காட்டி வந்தனர். இந்நிலையில் இந்த பாலம் நேற்று காலை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அந்தபகுதியை கடக்கமுடியாமல் அவதிக்கு உள்ளானார்கள். ஏற்கனவே இந்த பாலம் குறித்து சரி செய்து தர வலியுறுத்தி பலமுறை இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தற்போது பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இங்கு புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story