ஹாசனில் இன்று ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


ஹாசனில் இன்று ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:34 AM IST (Updated: 22 Sept 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஹாசனில் இன்று நடைபெறும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேவேகவுடா, குமாரசாமி பங்கேற்கிறார்கள்.

ஹாசன்,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஹாசனில் இன்று(சனிக்கிழமை) மாலை ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு தொலைபேசி மூலம் தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஹாசன் மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் செய்து வருகிறார்கள்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. கூட்டணி அரசுக்கு எழுந்துள்ள சிக்கல் தீரும் வரை எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள குமாரசாமி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story