குமாரசாமி சிறைக்கு செல்ல நேரம் வந்துவிட்டது : பா.ஜனதா எம்.எல்.ஏ. பேட்டி


குமாரசாமி சிறைக்கு செல்ல நேரம் வந்துவிட்டது : பா.ஜனதா எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2018 11:13 PM GMT (Updated: 2018-09-22T04:43:37+05:30)

சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரபலமானவர் பா.ஜனதாவை சேர்ந்த பசவனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.. இவர் தன்னிடம் அதிகாரம் இருந்தால், முற்போக்கு சிந்தனையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன் என்று சொன்னார்.

பெங்களூரு,

பசவனகவுடா பட்டீல் யத்னால் இவ்வாறு பல்வேறு விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் பசவனகவுடா பட்டீல் யத்னால் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவியில் இருந்து கொண்டு குமாரசாமி, பொறுப்பற்ற முறையில், பா.ஜனதாவுக்கு எதிராக போராடுமாறு மக்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார். அவர் ஒரு நகர நக்சலைட்டு என்று நினைக்க தோன்றுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுவதே குமாரசாமிக்கு தொழிலாகிவிட்டது. இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும், இதே மிரட்டல் தந்திரத்தை குமாரசாமி கடைப்பிடித்து வந்தார்.

மற்றவர்களை மிரட்டி அதன் மூலம் தனக்கு வேண்டிய பணிகளை அவர் செய்து கொள்கிறார். குமாரசாமி சிறைக்கு செல்ல நேரம் வந்துவிட்டது. ஜந்தகல் கனிம சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. எடியூரப்பாவை பற்றி குமாரசாமி கீழ்த்தரமாக பேசுகிறார். பதிலுக்கு எங்களுக்கும் பேசத்தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story