பாம்பு குறித்த ஆய்வுக்கு முன்வராத மக்கள்!


பாம்பு குறித்த ஆய்வுக்கு முன்வராத மக்கள்!
x
தினத்தந்தி 22 Sep 2018 5:15 AM GMT (Updated: 22 Sep 2018 5:15 AM GMT)

சுவிட்சர்லாந்தில் பாம்பு குறித்த ஆய்வுக்கு ஆட்கள் முன்வராத நிலை உள்ளது.

பாம்பு குறித்த அச்சத்தைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளவிருக்கும் அந்த ஆய்வில் பங்கேற்க ஆட்களைப் பிடிப்பதற்கு அந்நாட்டின் பேசல் பல் கலைக்கழகம் போராடி வருகிறது.

பாம்பு குறித்த ஆய்வு என்றால் ஆட்கள் தயங்குவது இயல்புதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மைக் காரணத்தை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பேசல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை சார்பில் நடத்தப்படவிருக்கும் குறிப்பிட்ட ஆய்வுக் காக 18 முதல் 35 வயது வரையுள்ள சுமார் 90 பேரை தேர்ந்தெடுக்க ஆய்வுக் குழுவினர் முடிவு செய்தனர்.

ஆய்வில் பங்கேற் பவர்களுக்கு ஆளுக்கு 120 சுவிஸ் பிராங்குகள் வழங்க முடிவு செய்து இந்த ஆண்டின் மத்தி யில் அந்த ஆய்வு முடிவை வெளியிட குழுவினர் திட்டமிட்டி ருந்தனர்.

பாம்பு குறித்துப் பயப்படும் மக்களை கவ ரும் வண்ணம் விளம் பரம் ஒன்றை வெளி யிட்டு பல மாதங்கள் ஆன பின்னும் வெறும் 30 பேர் மட்டுமே ஆய்வுக்கு விண்ணப் பித்துள்ளனர்.

உயிருள்ள ஆனால் விஷத்தன்மையற்ற பாம்புடன் பழகவேண்டியுள்ள இந்த ஆய்வில் இன்னும் அதிகமானோரை பங்கேற்கச் செய்வதற்காக சுவிஸ் நகரங்களில் ஓடும் டிராம்களில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனாலும் ஆய்வில் பங்கேற்க அதிகமானோர் ஆர்வம் காட்டவில்லை.

மக்களுக்கு பாம்பு குறித்துப் பயம் இருப்பதால்தான் இந்த ஆய்வில் பங்கேற்கத் தயங்குகிறார்கள் என்று முதலில் தோன்றினாலும் பின்னர் உண்மையான காரணம் தெரியவந்தபோது அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாம்புகள் மீதான பயம் சிலந்திகள் மீதான பயம் போன்றதுதான் என்று கூறும் பேசல் பல்கலைக் கழகத்தின் நரம்பியல் துறையைச் சேர்ந்த நதாலீ ஷீக்டான்ஸ், சுவிட்சர்லாந்தில் பாம்புகளே இல்லாத தால் இங்குள்ளவர்கள் பாம்புகளைப் பார்ப்பதே அரிது, எனவே இந்த ஆய்வுக்காக முதல்முறையாக பாம்பு களைப் பார்ப்பதால் அவர்களுக்குப் பயமே ஏற்படவில்லை என்பது தெரியவந்தது என்கிறார்.

ஆக, ஆய்வுக்கு ஆள் கிடைக்காததற்கு காரணம் பயம் என்று ஆய்வுக் குழுவினர் முதலில் எண்ணிய நிலையில், பாம்பு குறித்த பயம் என்னும் சுவாரசியம் இல்லாததுதான் காரணம் என்று பின்னர் தெரியவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story