ஒரு குழந்தை திட்டத்தைக் கைவிடும் சீனா?
ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள்தொகையில் உலகில் முதலிடத்தில் உள்ள சீனா, அதைக் கட்டுப்படுத்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியது. தற்போது அத்திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட சீனா முடிவெடுத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்ட அதே நேரம், அங்கு முதியவர்களின் எண்ணிக்கை அதி கரித்து மனிதவளம் குறைந்தது.
கடந்த 2016-ம் ஆண்டில் சீனாவில் குழந்தைகள் பிறப்பு 1 கோடியே 72 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 1 கோடியே 20 லட்சமாகக் குறைந் துவிட்டது. அதேநேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் விகிதம் 17.3 சதவீதமாக அதிகரித் துவிட்டது. தற்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடி.
முதியவர்கள் எண்ணிக்கை அதி கரித்து வருவதைத் தொடர்ந்து மனிதவள மேம்பாட்டைப் பெருக்க ஒரு குழந்தை திட்டத்தில் சில தளர்வுகளை சீனா அறிவித்தது. விரைவிலேயே அத்திட்டம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதற்கு முன்னோட்டமாக ஓர் அறி விப்பை சீன தேசிய சுகாதார கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு குழந்தை திட்டம் துறை இனி மக்கள்தொகை கண்காணிப்பு மற்றும் குடும்ப மேம்பாடு என மாற்றப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. அது சீனக் குடும்பங் களின் மேம்பாட்டுக்கு ஆதரவாகச் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
காலத்துக்கு ஏற்ப எல்லாவற்றிலும் மாற்றம் செய்யத்தானே வேணும்?
Related Tags :
Next Story