கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற அடப்பாற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்


கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற அடப்பாற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 22 Sep 2018 6:50 PM GMT)

கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற அடப்பாற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர், புழுதுகுடி, சோமாசி, தெற்குலேரி, அகரவயல், தூத்தடிமூலை, சிதம்பரகோட்டகம், சபாபதிபுரம், சிராங்குடி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதாகவும், அடப்பாற்றில் தேவையான அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோட்டூர் காந்தி பஜார் பஸ் நிறுத்தத்தில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செயற்பொறியாளர் கண்ணப்பன், இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன், கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Next Story