குஜராத் மாநிலத்தில் இருந்து பழமையான டீசல் ரெயில் என்ஜின் திருச்சி அருங்காட்சியகம் வந்தது
குஜராத் மாநிலத்தில் இருந்து பழமையான டீசல் ரெயில் என்ஜின் திருச்சி வந்தது. இதனை திருச்சி ரெயில்வே அருங்காட்சியகத்தில் புதுப்பொலியுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
திருச்சி,
திருச்சி ரெயில்வே அருங்காட்சியகத்தில் ரெயில்வே தொடர்பான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ரெயில்வே பொருட்கள் பல இடம்பெற்றுள்ளன. மேலும் ஊட்டி மலை ரெயிலில் பயன்படுத்தப்பட்ட பழமையான நீராவி என்ஜின் ஒன்றும் அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியக வளாகத்தில் ஊஞ்சல், பூங்கா, சிறுவர் ரெயில் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே அருங்காட்சியகத்தை பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ரெயில்வே அருங்காட்சியகத்தை மேம்படுத்த திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் பழமையான டீசல் என்ஜின் ஒன்றை நிறுவவும் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்குமார் ரெட்டி முடிவு செய்தார். இதற்காக மேற்கு ரெயில்வே மண்டல குஜராத் மாநிலம், படோரா அருகே பிரதாப்நகர் டீசல் பணிமனையில் இருந்து, பழமையான டீசல் என்ஜினை கொண்டு வர திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் கோரியது.
இதையடுத்து அங்கு ‘நேரோ கேஜ்‘ பாதையில் இயக்கப்பட்ட பழமையான டீசல் என்ஜின் ஒன்றை தர ரெயில்வே நிர்வாகம் சம்மதம் அளித்தது. மேலும் அந்த ரெயில் என்ஜின், லாரி மூலம் நேற்று திருச்சி கொண்டுவரப்பட்டது. பின்னர் லாரியில் இருந்து கிரேன்கள் மூலம் தூக்கி இறக்கப்பட்டு ரெயில்வே அருங்காட்சியகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டது. இதற்காக அங்கு பிரத்யேகமாக கான்கிரீட் தளத்தில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பழமையான இந்த டீசல் என்ஜினை சுத்தம் செய்து, வர்ணம் தீட்டி, புதுப்பொலிவுடன் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ரெயில் பாதைகள் நேரோ கேஜ், மீட்டர் கேஜ், பிராட் கேஜ் (அகல பாதை) என்ற 3 பிரிவுகளாக அழைக்கப்படுவது உண்டு. நேரோ கேஜ் என்பது சிறிய ரக தண்டவாள பாதை ஆகும். தெற்கு ரெயில்வே பொறுத்தவரை நேரோ கேஜ் பாதை என்பது இல்லை. மீட்டர் கேஜ், பிராட் கேஜ் பாதை மட்டும் உள்ளது. நேரோ கேஜ் பாதை வடமாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இருந்துள்ளது. இதில் இயக்கப்பட்ட ரெயில்களின் என்ஜின் வடிவமைப்பு மற்ற பாதைகளில் இயக்கப்படும் என்ஜின்களில் இருந்து வேறுபட்டவை. அமைப்பும் சிறியதாகதான் இருக்கும்.
அந்த காலத்தில் இயக்கப்பட்ட இந்த டீசல் என்ஜின் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் அப்படியே கிடந்தது. இதனை வண்ணமயமாக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும். என்ஜினில் சில பாகங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்து முழு வடிவமாக்கி பொதுமக்களை கவரும் வகையில் இந்த என்ஜின் மாற்றப்படும்.
இவ்வாறு கூறினர்.
என்ஜின் தயாரிக்கப்பட்ட ஆண்டு? எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது? கடைசியாக இந்த என்ஜின் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்ட ஆண்டு? உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாாகளிடம் கேட்ட போது, என்ஜின் மட்டும் தற்போது வந்துள்ளதாகவும், இதன் கூடுதல் விவரம் பற்றி இனிதான் மேற்கு ரெயில்வே மண்டல நிர்வாகத்திடம் கேட்டு பெற வேண்டும் எனவும், 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story