உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு,
சமத்துவ மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் டி.கணேசன், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* சமத்துவ மக்கள் கட்சியின் ‘தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை’ ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒரு மாதத்தில் நிறைவேற்றுவது.
* மேட்டூர் உபரிநீர் வலதுகரை கால்வாய் திட்டம் மற்றும் மணியாச்சி திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
* உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது.
* பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.