சாலை அமைக்கும் பணியை தொடங்க கோரி வாகனங்களை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகலஅள்ளி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலை முதல் ஊத்துப்பள்ளம் முடிவு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஊத்துப்பள்ளம் கிராமத்தில் மட்டும் ஜல்லிகற்கள் கொட்டி பரப்பப்பட்டது. இதற்கு அந்த ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் கிராமமக்கள் சாலையில் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்தநிலையில் சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அதே சாலையில் மாற்றுப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட வாகனங்களை நேற்று சிறைப் பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக நல்லம்பள்ளி-பொம்மிடி பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் சீரமத்துக்குள்ளாகினர். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story