“பிரச்சினைகளை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்” மனநல திட்ட அதிகாரி பேச்சு
பிரச்சினைகளை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் மனநல திட்ட அதிகாரி கார்த்திக் தெய்வநாயகம் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாவட்ட மனநல திட்ட அதிகாரி கார்த்திக் தெய்வநாயகம் கலந்து கொண்டு, மன உளைச்சலை கையாளுவது தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மன உளைச்சல் ஆதிகாலத்தில் இருந்து உள்ளது. மன உளைச்சலினால் தலைவலி, உடல் வலி, படபடப்பு, கை கால் நடுக்கம், தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், பசியின்மை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மன உளைச்சலை கையாள தெரியாமல் இருந்தால் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாவதோடு வீண் சண்டையிட்டு கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். மற்றவர்கள் எல்லாம் கஷ்டப்படுவதில்லை நாம் மட்டுமே கஷ்டப்படுகிறோம் என எண்ணுவதை முதலில் கைவிட்டாலே மன உளைச்சலின் தாக்கம் குறைந்துவிடும். இந்த பிரச்சினைக்கு தனிமனிதன் காரணம் அல்ல. முதல் மதிப்பெண், முதலிடம் போன்றவற்றின் மூலம் தனிமனிதன் தான் காரணம் என சிறு வயதில் இருந்தே பதிவு செய்யப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் தன்னையே குற்றப்படுத்தி கொள்வதனால் தான் மன உளைச்சல் ஏற்படுகிறது. ஆனால் உயிரியல், உளவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று காரணிகளுமே காரணமாகும்.
இந்த மூன்று காரணிகளும் ஓரிடத்தில் சேர்ந்து ஒருவருக்கு நெருக்கடி கொடுக்கும்போதுதான் பிரச்சினை தீவிரமடைந்து விடுகிறது. எனவே, பிரச்சினைகள் குறித்து நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம். மாணவர்கள் பல்வேறு திறன்களை பயன்படுத்தி, குழுவாக விவாதித்து கற்றாலே மன உளைச்சல் பிரச்சினையை தீர்த்து கொள்ளலாம். சுமார் 60 சதவீதம் பேருக்கு மனநல பிரச்சினைக்கு ஏற்படுகிறது. ஆனால், ஒரு சதவீதம் பேருக்குதான் மனநோய் ஏற்படுகிறது. மனநல பிரச்சினைக்கு மாத்திரை அவசியம் இல்லை. ஆனால் மனநோய்க்கு மாத்திரை அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்கான செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story