எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 345 வேலைவாய்ப்புகள்
எய்ம்ஸ் மருத்துவ மைய கிளைகளில் 345 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த மருத்துவமனை-ஆய்வு மையங்கள் உள்ளன. தற்போது புது டெல்லி மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள எய்ம்ஸ் கிளைகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர் உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 183 பேரும், புதுடெல்லி கிளையில் உதவி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிக்கு 162 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு வி்ண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...
புதுடெல்லி
புதுடெல்லி கிளையில் உதவி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிக்கு 162 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனஸ்தியாலஜி, கார்டியாலஜி, ஜி.ஐ. சர்ஜரி, லிவர் டிரான்ஸ்பிளாண்டேசன், லேபரேட்டரி மெடிசின், பீடியாட்ரிக் சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி, டெர்மடாலஜி, எண்டோகிரினாலஜி, யூராலஜி, நியூராலஜி, பேத்தாலஜி, ரேடியாலஜி, ஓரல் மெடிசின் உள்ளிட்ட 21 பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இது சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 31-8-2018-ந் தேதியில் 50 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதுமானது. 5-10-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.aiimsexams.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நகல் விண்ணப்பம் 20-10-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
ராய்ப்பூரில் 183 பணிகள்
ராய்ப்பூர் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளுக்கு 183 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எம்.டி., எம்.எஸ். முதுநிலை மருத்துவ படிப்புடன் 14 ஆண்டு கற்பித்தல் பணி அனுபவம் உள்ளவர்கள் பேராசிரியர் பணிக்கும், 8 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் கூடுதல் பேராசிரியர் பணிக்கும், 6 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இணை பேராசிரியர் பணிக்கும், 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 41 விதமான மருத்துவ பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் www.aiimsraipur.edu.in இது பற்றிய விவரங்களை பார்த்துவிட்டு 3-11-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அடுத்த 2 வாரங்களுக்குள் நகல் விண்ணப்பம் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

Related Tags :
Next Story