கச்சிராயப்பாளையம் அருகே; இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கச்சிராயப்பாளையம் அருகே கணவர் வெளிநாட்டுக்கு சென்றதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சசி (வயது 23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அய்யப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். சசியின் விருப்பமின்றி அய்யப்பன் வெளிநாடு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் சசி மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி சசி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சசி மீது எரிந்த தீயை அணைத்து, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story