முதல்–அமைச்சர் உள்பட 33 அமைச்சர்கள் மீதும் உள்ள ஊழல் புகார்கள் விரைவில் வெளிவரும் டி.டி.வி. தினகரன் பேட்டி
முதல்–அமைச்சர் உள்பட 33 அமைச்சர்கள் மீதும் உள்ள ஊழல் புகார்கள் ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும் எனறு டி.டி.வி. தினகரன் கூறினார்.
கும்பகோணம்,
நான் அ.தி.மு.க.வில் பொருளாளராக இருந்தபோது மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் ஆர்.பி.உதயகுமார். நான் 30 வருட அரசியலில் உள்ளேன். உதயகுமார் எப்படிப்பட்டவர் என அங்குள்ளவர்களுக்கும் தெரியும். தம்பி உதயகுமார், யாரால் அரசியலுக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் முடியும்வரை அவர் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் அமைச்சர்கள் பலர் இதுபோன்று வீர வசனங்கள் பேசி சூடு கண்டார்கள். அவர்களுக்கு திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் மக்கள் மரண அடிகொடுப்பார்கள். பின்னர் இவர்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.
முதல்–அமைச்சர் உள்பட 33 அமைச்சர்கள் மீதும் எண்ணற்ற ஊழல் புகார்கள் உள்ளன. அனைத்தும் ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும். அப்போது அவர்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்வார்கள். ஊழல்வாதிகள் அனைவரும் விரைவில் அவர்களுக்கான இடங்களில் இருப்பார்கள்.
கருணாஸ் உணர்ச்சி வசப்பட்டு பேசியது தவறு. அதை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் தமிழக அரசு அவரை கைது செய்துள்ளது. கருணாசுக்கு ஒரு நிலைப்பாடும், எச்.ராஜா, எஸ்.வி. சேகர் போன்றோருக்கு ஒரு நிலைப்பாடும் என தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. கருணாஸ் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அவரை கைது செய்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மழைநீர் வீணாக கடலில் சென்று கலப்பதைப்போல, பல வீணான திட்டங்களால் விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் தமிழகம் எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது.
ஆறு, குளங்கள், ஏரிகளை முறையாக பராமரித்து தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டி மழைக்காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தினாலே வெளிமாநிலங்களில் இருந்து தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. விவசாயத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயிகள் தற்கொலை போன்றவை ஏற்படாது.
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை மின்மிகை மாநிலமாக வைத்திருந்தார். தற்போதுள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவ்வாறு இல்லை என கூறுகிறார். நிலக்கரி காற்றாலை மின்சார உற்பத்தியை தனியாரிடமிருந்து வாங்குவதில் பேரம் பேசப்பட்டு அதில் உடன்பாடு ஏற்படாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போன்ற செய்திகள் வெளிவருகின்றன.
விரைவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்து விடும். அத்துடன் ஊழல்வாதிகளின் ஆட்டமெல்லாம் முடிவுக்கு வந்து விடும். மக்களும் அதை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story