காஞ்சீபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை


காஞ்சீபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை
x
தினத்தந்தி 25 Sept 2018 3:45 AM IST (Updated: 25 Sept 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் காந்திரோட்டில் உள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்க விழா நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்துகொண்டு தீபாவளி முதல் விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 17 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.8.80 கோடி விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.11 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு ரூ.1.5 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கு ரூ.1.80 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story