போலி மது விற்பனையா? கோவை டாஸ்மாக் கடைகளில் போலீசார் சோதனை


போலி மது விற்பனையா? கோவை டாஸ்மாக் கடைகளில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 24 Sep 2018 11:00 PM GMT (Updated: 24 Sep 2018 7:11 PM GMT)

கோவையில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.

கோவை,

கோவை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 266 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளின் அருகில் தனியார் நடத்தும் பார்களும் உள்ளன. பார்களில் 24 மணிநேரமும் மதுபானம் விற்பதா கவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

கோவை நகர மதுவிலக்குப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டு முருகசாமி ஆலோசனையின்பேரில், மதுவிலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் கோவை நகரில் உள்ள மதுக்கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். போலி மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று மதுபாட்டில்களின் லேபிள் களை சோதித்து பார்த்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கோவை நகரில் மதுக்கடைகளில் திடீர் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். நகரில் போலி மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்படவில்லை என்று இந்த சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.

கோவை நகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறும்போது, கோவை நகரில் மதுக்கடைகள் மற்றும் பார்களில் குறிப்பிட்ட நேரம் தவிர்த்து முறைகேடாக மது விற்பனை நடந்தால் போலீசாருக்கு புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக தற்போது தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதேபோல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளில் நேற்று சோதனைகள் நடந்தன.

Next Story