மேலத்தானியத்தில் கபடி போட்டி 32 அணிகள் பங்கேற்பு


மேலத்தானியத்தில் கபடி போட்டி 32 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Sept 2018 4:00 AM IST (Updated: 25 Sept 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் 32 அணிகள் பங்கேற்றன.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் ஆண்டுதோறும் ஊர்பொதுமக்கள் சார்பில் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்றன.

இதில் முதல் பரிசை பெரியகுருவம்பட்டி அணியும், 2-வது பரிசை திருச்சி அணியும், 3-வது பரிசை வெங்களூர் அணியும், 4-வது பரிசை குறிச்சிப்பட்டி அணியும் பெற்றன. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியை காரையூர், மேலத்தானியம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.

Next Story