வெண்ணந்தூர் அருகே அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு
வெண்ணந்தூர் அருகே சேதமடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகளுடன் திரண்டு வந்த பெற்றோர், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் மலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் நேற்று பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியில் இந்த கல்வியாண்டில் 284 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாததால் அருகில் உள்ள கோவில் மற்றும் மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கடந்த மே மாதம் வீசிய பலத்த காற்றினால், பள்ளி அருகில் இருந்த வேப்ப மரம் கட்டிடத்தின் மேற்கூரையில் விழுந்ததால், கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
ஏற்கனவே போதிய இடம் இல்லாத நிலையில், கட்டிடம் சேதமடைந்து உள்ளதால், இப்போது இட நெருக்கடி மேலும் அதிகரித்து உள்ளது. மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் பள்ளி சூழல் இல்லாததால், மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிப்படைந்து வருகிறது.
எனவே பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இட வசதி, கழிப்பிட வசதி மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். மேலும் சேதமடைந்த பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்த கலெக்டர், கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story