ஈரோட்டில் தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தலைமை தபால் அலுவலக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு தலைமை தபால் அலுவலக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பணிமூப்பு அடிப்படையில் உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 1.1.2016 முதல் வழங்கப்பட வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.சத்துருக்கன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வி.குமரகுருபரன் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட தபால் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story