திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:15 AM IST (Updated: 26 Sept 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் சிலைகளை அவமதித்தும், சேதப்படுத்தி வரும் நபர்களை கண்டித்தும், பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் அண்ணாசிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில், தோழமை கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் பெரியார் சிலைகளை அவமதித்தும், சேதப்படுத்தி வரும் நபர்களை கண்டித்தும், பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் நீலமேகம் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வநம்பி முன்னிலை வகித்தார். தி.மு.க. இளைஞர் அணி கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சின்னப்பா, எம்.ஜி.ஆர். கழக மாவட்ட செயலாளர் கலைவாணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story