குடகில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,000 வீடுகள் கட்ட விரைவில் டெண்டர் விடப்படும்
குடகில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1,000 வீடுகள் கட்ட விரைவில் டெண்டர் விடப்படும் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.
பெங்களூரு,
குடகில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1,000 வீடுகள் கட்ட விரைவில் டெண்டர் விடப்படும் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.
வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை மந்திரி யு.டி.காதர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
83 ஆயிரம் வீடுகள்
பெங்களூருவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பயனாளிகள் 49 ஆயிரத்து 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 2-வது கட்டமாக பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ராஜீவ்காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை கட்டி கொடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவது குறித்து ஆலோசனை நடத்த அதிகாரிகள் குழு மும்பை மற்றும் ஐதராபாத்துக்கு செல்ல உள்ளனர். முன்பு தரைதளம் உள்பட 4 மாடிகள் கட்ட ஆலோசிக்கப்பட்டது. குடிசைவாழ் மக்களுக்காக 83 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்க விரைவில் டெண்டர் விடப்படும். இதில் குடகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1,000 வீடுகள் கட்ட விரைவில் டெண்டர் விடப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மிடுக்கான நகரம்(ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நடப்பு ஆண்டில் மாநிலத்தில் 4 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.
Related Tags :
Next Story