தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் தஞ்சையில் பாரிவேந்தர் பேட்டி
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தஞ்சையில் பாரிவேந்தர் கூறினார்.
தஞ்சாவூர்,
இந்திய ஜனநாயக கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் கட்சியின் வளர்ச்சி குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில் மாநில அமைப்பாளர் லட்சுமணன், மாநில மகளிரணி செயலாளர் அமுதா ராஜேந்திரன் மற்றும் மாவட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு நிறுவன தலைவர் பாரிவேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய ஜனநாயக கட்சியின் மண்டல அளவிலான கூட்டம் ஏற்கனவே சென்னை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. தற்போது தஞ்சையில் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க.வுடனான கூட்டணி கொள்கை அடிப்படையில் தொடர்கிறது.
அதே சமயம் மக்கள் கருத்துக்கள் அடிப்படையிலும், தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தும், பா.ஜ.க.வின் செயல்பாடுகளை சீர் தூக்கி பார்த்துவிட்டு தேர்தல் நேரத்தில் கூட்டணியில் தொடருவது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். நல்ல ஆட்சியாளர்கள் வரும்போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும். அதுவரை ஊழல், முறைகேடுகள் தொடரும். வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்தாலே தண்ணீருக்காக அண்டை மாநிலத்திடம் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story