மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்
மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 634 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவிடைச்சேரி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் வேளாண்மை எந்திரங்கள் உள்பட மொத்தம் 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 634 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து தேவை என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த மாதம் (செப்டம்பர்) ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.தனி நபர் கழிவறை திட்டத்தில் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் கழிவறைகளை கட்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஊட்டச்சத்து மாதத்தையொட்டி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வ நாயகி, திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ரெங்கநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி இருதயராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாப்பா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story