விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சியில் நடந்தது.
திருச்சி,
அகில இந்திய முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் நேற்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அங்கிருந்து தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில், கோர்ட்டு ரோடு, எம்.ஜி.ஆர். சிலை வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைந்தனர்.
தலைக்கவசம் அணிந்து கொள்ளாமலும், செல்போனில் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டு வதாலும் ஏற்படும் விபத்துகளால் முகத்தில் எலும்பு முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக ஆய்வு விவரம் தெரிவிக்கிறது. எனவே, இந்த விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புகையிலை மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் ஏற்பட்டு முகம் பாதிக்கப்படுவது குறித்தும், பிறவி குறைபாட்டால் முகம் மற்றும் தாடைப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை உயர்தர நவீன சிகிச்சைகள் மூலமாக சீரமைக்க முடியும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஏற்கனவே சேலம், சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, கோவை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
அடுத்து வருகிற அக்டோபர் மாதம் 11-ந் தேதி முதல் 13-ந் தேதிவரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அகில இந்திய முகம் சீரமைப்பு நிபுணர்கள் கருத்தரங்கு நடக்க உள்ளது என்றும், இந்த கருத்தரங்கை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார் என்றும் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story