வங்கி கடன் தவணை செலுத்தாமல் ரூ.19¾ லட்சம் மோசடி


வங்கி கடன்  தவணை செலுத்தாமல் ரூ.19¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 27 Sept 2018 3:15 AM IST (Updated: 27 Sept 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கடன் மூலம் புதிய லாரி வாங்கிய பின் தவணை செலுத்தாமல் ரூ.19¾ லட்சத்தை மோசடி செய்த டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 


கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் முருகேசபாண்டியன். இவர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் செய்தார்.

அந்த புகாரில், கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரத்தை சேர்ந்த டிரைவர் நடராஜன் என்பவர் எங்களது வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டில் ரூ.29 லட்சத்து 85 ஆயிரத்தை கடனாக பெற்று புதிய லாரி வாங்கினார். இதற்காக அவர் மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு வரை இவர் மொத்தம் ரூ.10 லட்சத்து 3 ஆயிரத்தை தவணை முறையில் வட்டியுடன் பணம் செலுத்தினார். அதன் பிறகு மீதமுள்ள ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார்.

ஆனால் அந்த தொகையை வங்கியில் செலுத்திவிட்டதாக போலியான ஆவணங்களை தயாரித்ததோடு அந்த ஆவணங்களை கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு அந்த லாரியை வேறொருவருக்கு விற்று விட்டார். எனவே பணத்தை மோசடி செய்த நடராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் நடராஜன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story