முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.ராதாகிருஷ்ணன்- தளவாய் சுந்தரம் வழங்கினர்
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 341 முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் ஆகியோர் வழங்கினர்.
நாகர்கோவில்,
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறையின் சார்பில் ராஷ்ட்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தில், வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான ராகுல்நாத் தலைமை தாங்கினார்.
மத்திய நிதி மற்றும் கப்பல்் போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஆகியோர் இணைந்து 341 பேருக்கு ரூ.8 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
ஏழை, எளிய முதியோரின் வாழ்வில் ஒளியேற்றிட பிரதமர் மோடி இதுபோன்ற நலத்திட்டங்களை இந்தியாவில் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைத்திட செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் பிரதமர் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்துள்ளார்.
எனவே பொதுமக்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை பெற்று வாழ்வில் நலம் பெற வாழ்த்துகிறேன். இவ்விழாவின் மூலம் 341 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் முன்னிலை வகித்து பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பில் இருந்த போதெல்லாம் ஏழை, எளிய மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தங்கு தடையின்றி வழங்கிட ஆவன செய்தார். அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 ஆக இருந்ததை உயர்த்தி ரூ.1000-ஆக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 2014 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1500-ஆக உயர்த்தப்பட்டு குமரி மாவட்டத்தில் 5,419 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51 கோடியே 43 லட்சத்து 36 ஆயிரத்்து 500 இதுவரை மாற்றுத்திறாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை 156 பேருக்கு ரூ.46 லட்சத்து 50 ஆயிரமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் 302 பேருக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு என்.தளவாய் சுந்தரம் பேசினார்.
நிகழ்ச்சியில் இருளப்பபுரம் பெரியசாமி பாண்டியன் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.அசோகன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு இணைய முன்னாள் தலைவர் ஜாண் தங்கம், பொழிக்கரை மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், ஜெயச்சந்திரன், செய்தி மக்கள்தொடர்புத்துறை கூடுதல் இயக்குனர் (ஓய்வு) தாணப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story