சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆதார் அடையாள அட்டையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
ஆதார் அடையாள அட்டை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பு சாதகமாகவும், சில விஷயங்களில் கருத்து மாற்றத்தோடும் கொடுத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான முடிவு ஆதார் சிறப்பு நிறைந்தது, தேவை என்பதை வலியுறுத்தி சொல்லியிருப்பது ஆதார் அடையாள அட்டையின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு வலியுறுத்தி காட்டுகிறது. அந்த வகையில் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டையின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும் என்று நான் நம்புகிறேன்.
அரசு பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான தனி ஒதுக்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நான் முழுமையாக பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்.
பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஜி.எஸ்.டி. வரம்புக்குள்ளாக ஒரு பொருளை கொண்டு வருவதும், வராமல் இருப்பதும், எந்த அளவுக்கு அந்த பொருளுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக வரிவிதிப்பது என்பதும் முடிவு செய்யக்கூடிய குழு ஜி.எஸ்.டி.குழு. அந்த குழுவில் நாட்டில் அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்தக்குழு எடுக்கும் முடிவுதான் மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த முடியுமே தவிர, மத்திய அரசு தானாக முடிவு எடுக்காது.
தமிழகத்தின் நிலைப்பாடு ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல்- டீசலை கொண்டுவரக்கூடாது என்பது. இதேபோல பல மாநிலங்களும் உள்ளது. எனவே இதற்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
பா.ஜனதா கட்சி தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியின் கதவையும் தட்டி நிற்க வில்லை.
அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மத்தியில் மீண்டும் இப்போதிருக்கும் இடங்களைவிட அதிக இடங்களைப் பெற்று மிகப்பலமான ஆட்சியை அமைக்கப்போவது பா.ஜனதா கட்சி. பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறார்.
கடும் நடவடிக்கை
தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடைப்பட்ட பகுதி, தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடைப்பட்ட பகுதியான மலைப்பகுதிகளில் மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்காக நக்சலைட் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. ஏற்கனவே நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய எச்சரிக்கையின் வெளிப்பாடு இது. இதுகுறித்து தமிழக அரசு இன்னும் அதிக கவனம் கொடுத்தாக வேண்டும். பயங்கரவாதிகளை ஒழிப்பதில் எந்த காரணத்தைக்கொண்டும் நீக்கு, போக்கு காட்டக்கூடாது. கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் கழகங்கள் இல்லாத தமிழகம் காணவேண்டும். அதுதான் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு ஒரு உன்னதமான நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
குட்கா விவகாரத்தில் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற ஒரு விஷயம் உறுதிப்படுத்தப்படும்போது அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். பாதி அ.தி.மு.க.வினர் அழியவேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் கவர்னரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு இயற்கை வளங்கள் கடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் பார்வைக்கு எடுத்துச்செல்வேன். அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதில் கலெக்டர் தனிக்கவனம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Tags :
Next Story