டிப்பர் லாரி மோதி விபத்து: டிப்ளமோ மாணவர் பலி
மேச்சேரி அருகே டிப்பர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற டிப்ளமோ மாணவர் பலியானார். உடன் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தான்.
மேச்சேரி,
மோட்டார் சைக்கிளில் சென்ற டிப்ளமோ மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மேச்சேரி அருகே வேங்கானூர் ஆட்டுக்காரன்வளவு பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 19). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய உறவினரான மேச்சேரி அருகே கம்மம்பட்டி பகுதியை சேர்ந்த இளங்கோவின் மகன் சந்தீப் (15). இவன் மேச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவர்கள் இருவரும் மேச்சேரியில் இருந்து மல்லிகுந்தம் நோக்கி நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை அருள்குமார் ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்குமார் இறந்து விட்டார். படுகாயம் அடைந்த மாணவன் சந்தீப், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story