அமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் நாகர்கோவிலில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
அமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சி.ஐ.டி.யூ. செயலாளர் தங்கமோகன், துணை தலைவர்கள் அந்தோணி, அண்ணாதுரை, நிர்வாகிகள் பெருமாள், ஐடாஹெலன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–
மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி ஆலம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். அவர்கள் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 29–ந் தேதி கழுவன்திட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அவதூறாக பேசினார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதே விவகாரத்தில் புகார் கூறப்பட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் எடுபிடி அரசாக உள்ளது. பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பேசும் போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தமிழகத்தில் அதிகரித்துள்ள மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் அவசியம் என்பதை ஏற்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்நிலைகள் அனைவருக்கும் பொதுவானது. மதத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் தாமிரபரணி நதியில் புஷ்கர விழா நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். நெல்லை மற்றும் குமரியில் மதசார்புடன் நடத்த இருக்கும் புஷ்கர விழாவை அனுமதிக்கக்கூடாது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் உரிமைக்காக போராடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அ.தி.மு.க. அரசு ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்படி செய்தால் ஏழை குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Related Tags :
Next Story