‘நாக்கை அறுப்பேன்’ என்று கூறிய அமைச்சர் துரைக்கண்ணு மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
அ.தி.மு.க. ஆட்சியை தவறான பேசினால் நாக்கை அறுப்பேன் என்று கூறிய அமைச்சர் துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் அ.ம.மு.க. வக்கீல் பிரிவினர் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை மாநகர மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் நல்லதுரை தலைமையில் நிர்வாகிகள் 8 பேர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தஞ்சை ரெயிலடியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசியபோது, எங்களது ஆட்சியை தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என்று அரசை விமர்சிப்பவர்களுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசியுள்ளார்.
கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அதை மறுக்கும் வகையிலும், அந்த உரிமையை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மிரட்டலையும், அச்சுறுத்தலையும் வெளிப்படையாக விடுத்துள்ளார். இதனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாநில அமைச்சராகவே இருப்பினும், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு பேச முடியாது என்று தெரிந்திருந்தும் வெளிப்படையாக நாக்கை அறுப்பேன் என்று பேசி பொதுமக்களிடம் கலவரத்தை தூண்டும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியுள்ளார். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story