வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2018 4:00 AM IST (Updated: 28 Sept 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை பி.எல்.ஏ. ரவுண்டானா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை பி.எல்.ஏ. ரவுண்டானா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனசை நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஜமாபந்தி படி வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு சிறப்பு படி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெறும் கிராம உதவியாளர்களுக்கு இறுதியாக வழங்கும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்லையா, பொருளாளர் செந்தில்குமார் உள்பட வருவாய் கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story