நீர்நிலைகள் அனைவருக்கும் பொதுவானது: தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்தக்கூடாது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
நீர்நிலைகள் அனைவருக்கும் பொதுவானது. எனவே தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்தி மதச்சாயம் பூசக்கூடாது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சி.ஐ.டி.யு. செயலாளர் தங்கமோகன், துணை தலைவர்கள் அந்தோணி, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி ஆலம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். அவர்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்டித்து 29-ந் தேதி (அதாவது நாளை) கழுவன்திட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அவதூறாக பேசினார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதே விவகாரத்தில் புகார் கூறப்பட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் எடுபிடி அரசாக உள்ளது. பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பேசும் போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தமிழகத்தில் அதிகரித்துள்ள மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்தநிலையில் மார்த்தாண்டம் ஆலம்பாறை பகுதியில் போலீசார் தாக்கியதாக கூறப்படும் ஜெயராஜ், கிறிஸ்துராஜ் ஆகியோரது வீடுகளுக்கு ராமகிருஷ்ணன் சென்றார். அவர் களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலிபர் சங்கத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் அனைவருக்கும் பொதுவானது. தாமிரபரணியில் புஷ்கர விழா போன்ற விழாக்களை நடத்தி மதச்சாயம் பூசக்கூடாது என்றார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மாவட்ட செயலாளர் செல்லசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story