திருமணமான பெண், அண்ணன் உறவுமுறை வாலிபருடன் மாயம் கண்டுபிடித்து தரும்படி போலீசில் கணவர் புகார்
முறை தவறிய காதலில் ஈடுபட்டு அண்ணன் உறவுமுறையான வாலிபருடன் திருமணமான பெண் மாயமானார்.
பெங்களூரு,
முறை தவறிய காதலில் ஈடுபட்டு அண்ணன் உறவுமுறையான வாலிபருடன் திருமணமான பெண் மாயமானார். மனைவியை கண்டு பிடித்து தரும்படி கணவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடிவருகிறார்கள்.
முறை தவறிய காதல்
துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா பீமனகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மமதா(வயது 27). இவர்களுக்குகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் மமதாவின், சித்தி மகன் வெங்கடேஷ்(29) அடிக்கடி மமதாவின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். வெங்கடேசும் மமதாவும் அண்ணன்-தங்கை உறவு முறை என்பதால் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அண்ணன்-தங்கை என்ற உறவுமுறையை கடந்து இவர்கள் 2 பேருக்கும் இடையேயான பழக்கம் முறை தவறிய காதலாக மாறி உள்ளது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
வீட்டில் இருந்து மாயம்
இந்த முறையற்ற காதல் விவகாரம் பற்றி அறிந்த ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வெங்கடேஷ், மமதா இருவரையும் கண்டித்தனர். இருப்பினும், அவர்கள் தங்கள் காதலை கைவிடவில்லை. இந்த நிலையில், வெங்கடேசும், மமதாவும் தங்களின் வீடுகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர்.
இவர்கள் 2 பேரையும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
போலீஸ் வலைவீச்சு
இதனால் மனம் உடைந்த மமதாவின் கணவர் ரமேஷ், பாவகடா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், ‘தனது மனைவி மமதாவை, வெங்கடேஷ் இழுத்து சென்றுள்ளார். மமதாவை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
ஏற்கனவே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ்-மமதா இருவரும் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்கள். பின்னர் அவர்கள் 2 பேரையும் குடும்பத்தினர் தேடி கண்டுப்பிடித்து, மமதாவுக்கு அறிவுரை கூறி கணவருடன் சேர்த்து வைத்ததுள்ளனர். இந்த நிலையில் இந்த முறையற்ற காதல் ஜோடி மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளது.
Related Tags :
Next Story