ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து மராட்டியத்தில் மருந்து கடைகள் இன்று அடைப்பு

ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து மராட்டியத்தில் மருந்து கடைகள் இன்று அடைப்பு
x
தினத்தந்தி 28 Sept 2018 5:05 AM IST (Updated: 28 Sept 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து மராட்டியத்தில் மருந்து கடைகள் இன்று அடைக்கப்படும் என்று மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மும்பை, 

ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து மராட்டியத்தில் மருந்து கடைகள் இன்று அடைக்கப்படும் என்று மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆன்-லைன் மருந்து வணிகம்

ஆன்-லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதி அளிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து அகில இந்திய அளவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மருந்து கடைகள் அடைக்கப்படுகின்றன. மராட்டியத்தில் 55 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்படுகின்றன.

இதுபற்றி மராட்டிய மாநில மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் அனில் நவந்தார் கூறுகையில், ‘‘மராட்டியத்தில் இன்று நள்ளிரவு 12 மணி வரை மருந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கும். மும்பை ஆசாத் மைதானத்தில் மருந்து கடைக்காரர்கள் மதியம் 12 மணியளவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’’ என்றார்.

உத்தரவு

இந்தநிலையில், மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் அனைத்தும் 24 மணி நேரம் திறந்து இருப்பதை உறுதி செய்யும்படி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மாநில மருத்துவக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

Next Story