ஆன்-லைன் மூலம் விபசாரம்; பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் சிக்கினர்
கடலூர் அருகே ஆன்லைன் மூலம் விபசாரம் செய்த பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் சிக்கினர். 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.
ரெட்டிச்சாவடி,
கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் அடுக் குமாடி குடியிருப்புகளும், தனித்தனியாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இதில் 3 வீடுகளுக்கு மட்டும் அடிக்கடி வெளியூர் ஆட்கள் வந்து சென்றனர். சிலர் ஆடம்பர கார்களிலும் வந்து இறங்கினர். அதுமட்டுமின்றி 3 வீடுகளில் இருந்து அழகான பெண்களும் அவ்வப்போது வெளியே சென்று வந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நோட்டமிட ஆரம்பித்த னர். அப்போதுதான், 3 வீடுகளிலும் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் அந்த 3 வீடுகளுக்கும் சென்றனர்.
அப்போது 2 வீடுகளில் 3 புரோக்கர்களும், ஒரு வீட்டில் 3 அழகிகளும் இருந்தனர். மேலும் அங்கு ‘ஸ்வைப் மெஷினும்’, கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அழகிகளில் 2 பேர் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அழகிகளை மீட்ட போலீசார், கடலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து புரோக்கர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மேகலை, எழிலரசி, வந்தவாசியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் என்பதும், 3 பேரும் புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. புரோக்கர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
புதுச்சேரியில் விபசார தொழில் நடத்த பல போட்டிகள் நிலவியது. அதனால் புதுச்சேரி, தமிழக எல்லையான பெரியகாட்டுப்பாளையத்தில் 3 வீடுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளனர். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ஆன்-லைன் மூலம் விபசார தொழில் நடைபெற்றுள்ளது.
இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ரொக்கமாகவும், ‘ஸ்வைப் மெஷின்’ மூலமாகவும் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபசாரம் தொழில் நடத்திய 2 பேரை தேடி போலீசார் வருகின்றனர்.
Related Tags :
Next Story