ராமேசுவரம்,பாம்பனில் பலத்த மழை
ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதில் அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு தண்ணீர் தேங்கியது.
ராமேசுவரம்,செப்.30–
ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதில் கோவில் பிரகாரத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதே போல் தங்கச்சிமடம்,பாம்பன் பகுதியிலும் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.பலத்த மழையால் ராமேசுவரத்தின் நகரின் சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.பேய்க் கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பும் சாலையிலும் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதேபோல் பேய்க்கரும்பு பேருந்து நிறுத்தம் எதிரிலும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் 48.2 மில்லி மீட்டரும்,பாம்பனில் 34.4 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 30.1 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story