மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய 3 பேர் கைது மினி லாரிகள் பறிமுதல்


மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய 3 பேர் கைது மினி லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Sept 2018 4:51 AM IST (Updated: 30 Sept 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை பகுதியில் செம்மண் கடத்துவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று கழுவன்திட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒரு கும்பல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினிலாரிகள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

மேலும் இதுதொடர்பாக மினிலாரி டிரைவர்களான கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த ரெஜின் (வயது 32), வினு மோன் (32), மருதங்கோடு பகுதியை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் ஷாஜி கிருஷ்ணன் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story