காஞ்சீபுரம்-சென்னை கடற்கரைக்கு புதிய பயணிகள் ரெயில் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் வண்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.
காஞ்சீபுரம்,
இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.40 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில், காஞ்சீபுரம் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் சேவைக்கு காஞ்சீபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்-சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில்விட ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை முதல் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையிலான புதிய பயணிகள் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. புதிய ரெயில் சேவையை காஞ்சீபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை செல்கிறது.
இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.40 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில், காஞ்சீபுரம் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் சேவைக்கு காஞ்சீபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story