தஞ்சை மாவட்டத்தில் 2–வது நாளாக பரவலாக மழை திருவையாறில் அதிகபட்சமாக 33 மி.மீ. பதிவானது
தஞ்சை மாவட்டத்தில் 2–வது நாளாக பரவலாக மழை பெய்தது. திருவையாறில் அதிகபட்சமாக 33 மி.மீ. பதிவானது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்யத்தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று 2–வது நாளாகவும் பரவலாக மழை பெய்தது.
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. அதன் பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை அண்ணாசிலை, ரெயில்வே கீழ்பாலம் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–
அதிராம்பட்டினம் 2, கும்பகோணம் 6, பாபநாசம் 7, தஞ்சாவூர் 11, திருவையாறு 33, திருக்காட்டுப்பள்ளி 5, வல்லம் 15, கல்லணை 3, அய்யம்பேடடை 12, திருவிடைமருதூர் 22, மஞ்சளாறு 9, நெய்வாசல் தென்பாதி 17, பூதலூர் 7, வெட்டிக்காடு 31, ஈச்சன்விடுதி 7, ஒரத்தநாடு 4, மதுக்கூர் 3, பட்டுக்கோட்டை 31, பேராவூரணி 3, அணைக்கரை 22, குருங்குளம் 8.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story