கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, பொருளாளர் குமரேசன், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பசுமை பண்ணை திட்டம், அம்மா மருந்தகம், இ.சேவை மையம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். பால் கூட்டுறவுத் தணிக்கைத்துறையில் உள்ள 290 பணியிடங்கள் மற்றும் பொது வினியோகத் திட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களைபறிக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மாவட்டங்களில் தேர்தல் பணிகளுக்கு நிரந்தரப்பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story