சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அய்யப்ப பக்தர்கள் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி,
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆரல்வாய்மொழியில் நேற்று அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து கூடினர். இதற்கு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆனால் அய்யப்ப பக்தர்கள் போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்று ஆரல்வாய்மொழி சந்திப்பு பகுதியில் உள்ள மாரி முத்தாரம்மன் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாரியப்பன் தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் ஒன்றிய தலைவர் ஆரல் முருகன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மணிகண்டன், மாவட்ட அமைப்பாளர் நடராஜ பிள்ளை, மாவட்ட செயலாளர் பைசூ, பா.ஜனதா ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், பிரசார அணி செயலாளர் இசக்கிமுத்து, மாநில பொதுகுழு உறுப்பினர் சொக்கலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் மாதேவன்பிள்ளை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். உடனே போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 41 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Related Tags :
Next Story