50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் பேரணி - திருப்பூரில் 15ந் தேதி நடக்கிறது
ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் பேரணி திருப்பூரில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்தக்கோரி நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களுக்கு பாசனம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி வரும் 15-ந் தேதி திருப்பூரில் மாபெரும் கவன ஈர்ப்பு எழுச்சி பேரணி பல்லடம்ரோடு டி.கே.டி. மில் பகுதியில் இருந்து தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே முடிகிறது. பேரணியின் முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட உள்ளது.
இந்த பேரணிக்கான விழிப்புணர்வு கூட்டம் பொங்கலூரை அடுத்த கவுண்டம்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பகிர்மானக்குழு தலைவர் கண்டியன்கோவில் கோபால் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திட்டக்குழுவின் தலைவர் மெடிக்கல் பரமசிவம், கூட்டமைப்பு தலைவர் எஸ்.ஆர்.ராஜகோபால், பகிர்மானக்குழு தலைவர்கள் சுவாமியப்பன், வரதராஜ், ஈஸ்வரன், நல்லதம்பி, ஜெயபால், அருண், சின்னக்காளிபாளையம் பாசனசபைத்தலைவர் ஈஸ்வரன் மற்றும் சுப்பிரமணியம், பரமசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
தென்மேற்கு பருவமழையின் போது மேற்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை தேக்கி நடைபெறும் இந்த பாசனத்திட்டத்தில் போதுமான அணைகள் இல்லாததால் தொடர்ந்து தண்ணீர் கேரளா வழியாக கடலில் கலந்து வீணாகி வருகிறது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவான போது கேரளாவில் இடைமலையாறு அணை கட்டப்பட்ட பின் தமிழகம் நல்லாறு அணையை கட்டிக்கொள்ளலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கேரள அரசு கடந்த 1985-ம் ஆண்டு அந்த அணையை கட்டி முடித்து விட்டது.
ஆனால் நாங்கள் இன்னும் அணையை கட்டி முடிக்கவில்லை என்று கூறி வருகிறது. தற்போது உலக வங்கியில் கடன் பெற அணை கட்டி முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை இனி கேரள அரசு மறைக்க முடியாது. எனவே இதுதான் நமக்கு சரியான நேரம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால்தான் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றினால்தான் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் முழுமை அடையும். கடந்த 33 ஆண்டுகளாக இந்த திட்டதை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எனவே ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற கோரி வரும் 15-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் பேரணியில் 50 ஆயிரம் விவசாயிகளை கலந்து கொள்ள செய்வது என்றும், அதற்கான பணியில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Tags :
Next Story