மாத்தாடி காம்கர் சங்க தலைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி


மாத்தாடி காம்கர் சங்க தலைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 4 Oct 2018 4:15 AM IST (Updated: 4 Oct 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை வாஷி காய்கறி மொத்த மார்க்கெட்டில் உள்ள மாத்தாடி காம்கர் (சுமை தூக்கும் தொழிலாளர்) சங்க தலைவராக இருந்து வருபவர் ஜகதீஷ்.

அம்பர்நாத்,

ஜகதீஷ் பத்லாப்பூரில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வங்கிக்கு சென்றபோது அவருக்கு எதிரே 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் திடீரென அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் அவரை நோக்கி சுட முயன்றார். இதில் துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியே வராததால், ஜகதீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜகதீஷ் சம்பவம் குறித்து பத்லாப்பூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொல்ல முயன்றவர்கள் யார்? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story