மும்பை விமானத்தில் பறவை மோதி விபத்து


மும்பை விமானத்தில் பறவை மோதி விபத்து
x
தினத்தந்தி 4 Oct 2018 4:26 AM IST (Updated: 4 Oct 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இருந்து நேற்று காலை அவுரங்காபாத் நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

மும்பை,

நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, பறவை ஒன்று அந்த விமானத்தின் இடதுபக்கத்தில் மோதியது. இருப்பினும் அந்த விமானம் அவுரங்காபாத் சிக்காதானா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதன் பின்னரே பயணிகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர்.

இதையடுத்து, அங்கிருந்து மும்பைக்கு செல்ல இருந்த அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் அந்த விமானத்தில் மும்பைக்கு பயணம் செய்ய இருந்த அதுல் சாவே எம்.எல்.ஏ., பா.ஜனதா மூத்த தலைவர் பக்வத் கரட் ஆகியோரின் பயணம் ரத்தானது.

Next Story